மதுரை அமெரிக்கன் கல்லுாரியின் அலுமினி விழா நடந்தது. அதில் அங்கு 1978-ல் படித்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனா்.
கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் அமெரிக்கன் கல்லுாரியின் முன்னாள் மாணவரும் நடிகருமான விவேக் கலந்து கொண்டார்.
பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
அதனைதொடா்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது நடிகர் விவேக் கூறியதாவது தமிழகம் முழுதும் நீர் நிலைகள் வறண்டுள்ளது இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
மழை பெய்ய வேண்டுமென்றால் தொடர்ந்து மரக் கன்றுகளை நட வேண்டும் பள்ளிகளில் அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
விடுமுறை நாட்களில் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை துார்வார இளைஞர்கள் முன்வரவேண்டும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்திற்கு அதிகளவு மரங்கள் வெட்டப்பட்டதே காரணம்.
நல்ல கருத்துக்களை சினிமா மூலம் எடுத்துச் சொல்லி வருகிறேன் அதெல்லாம் நல்லவிதமாக மக்களைச் சென்றடைந்து மக்கள் என்னை விரும்புவார்களானால் அவர்கள் விருப்பபடி அரசியலுக்கு வருவேன் இவ்வாறு அவர் கூறினார்.