திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத்தலைவராக எம்.பி. கனிமொழியும், கொறடா தலைவராக முன்னாள் மத்தியமைச்சர் ஆ.ராசா ஒருமனதாக தேர்வு  செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 37 பேர் வெற்றி  பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காட்டி வாழ்த்து பெற்றனர்.

இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் கூட்டம் சென்னை  அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு, மக்களவை குழு துணைத்தலைவராக எம்.பி. கனிமொழி மற்றும் கொறடா தலைவராக முன்னாள் மத்தியமைச்சர் ஆ.ராசா, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா, மாநிலங்களவை கொறடாவாக டி.கே.ஸ் இளங்கோவன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...