காணிகுடியிருப்பில் 72 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி பொதுமக்கள் மகிழ்ச்சி…..!

காணிகுடியிருப்பில் 72 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி பொதுமக்கள் மகிழ்ச்சி.....!

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் காரையாறு சின்னமயிலாறு காணிகுடியிருப்பில் உள்ள 48 வீடுகளுக்கு இதுவரை மின்வசதி வழங்கப்படவில்லை.

இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும், வன விலங்குகள் அதிகளவில் நடமாட்டம் உள்ள பகுதி என்பதாலும் மின்சாரம் வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நீடித்து வந்தன.

இதனையடுத்து தற்போது மத்திய, மாநில அரசுகள் சின்னமயிலாறு காணிகுடியிருப்பு பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மின்சார வசதி செய்ய உத்தரவிட்டுள்ளன.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் நாங்கள் இந்த பகுதியில் பல நுாறு ஆண்டுகளாக எங்க பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம்

மேலும் இயற்கையோடு ஒட்டி எங்கள் வாழ்வாதரத்தை அமைத்துள்ளதால் வன விலங்குகளுக்கு எவ்வித தொந்தரவும் இல்லாத ஒரு வாழ்க்கையை எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு அமைத்து தந்துள்ளனா்.

இதனடிப்படையில் எங்கள் பகுதி மக்களின் நீண்ட வருட கோரிக்கையும், ஆசையுமான மின்சார வசதி ஏற்படுத்தி கொடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு எங்களது நன்றிகளை காணிக்கையாக்குகிறோம் இவ்வாறு அவர்கள் கூறினா்.

வனத்துறை நிதி உதவியுடன் அப்பகுதியில் உள்ள 48 வீடுகளுக்கு நேற்று முன்தினம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி கிடைத்திருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...