செங்கோட்டை அருகே உள்ள அழகப்பபுரம் விஸ்வம் பவுண்டேசன் சார்பில் 100 ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செங்கோட்டை அருகே
அழகப்பபுரத்தில் உள்ள விஸ்வம் பவுண்டேசன் சார்பில் 2019-20-ம் ஆண்டில் பள்ளி செல்லும் 100 ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்கூல் பேக், நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அமைைப்பின் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். மேனேஜிங் டிரஸ்ட்டி டாக்டர் சுகன்யா ஏழை எளிய மாணவ, மாணவிகள் 100 பேருக்கு ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக்குடன் இலவசமாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சமூக ஆர்வலர் சேதுபதி நன்றி கூறினார்.