கரூரில் தொழில் போட்டி காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து வானத்தை நோக்கி பொம்மை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களால் பரபரப்பு – வெங்கமேடு போலீஸார் விசாரணை
கரூர் மாவட்டம் வெண்ணமலை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 42)இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இதனால் கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் கார் வாங்கி விற்கும் தொழில் செய்பவர்களிடம் இவருக்கு தொடர்பு உண்டு நேற்று இரவு திருப்பூரைச் சேர்ந்த சின்னசாமி என்பவருக்கும் இவருக்கும் விக்னேஷ்க்கும் தொழில் போட்டி காரணமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு கார்களில் சின்னச்சாமி மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் வெண்ணைமலை பூர்ணிமா கார்டனில் உள்ள விக்னேஷ் மீட் என்பவர் வீட்டிற்கு வந்து உள்ளனர் அங்கு தொழில் சம்பந்தமாக இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
வாய்த்தகராறு ஏற்பட்டதுடன் கைகலப்பும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்பூரைச் சேர்ந்த சின்னசாமி மற்றும் அவரது நண்பர்கள் பொம்மை துப்பாக்கியை காட்டி விக்னேஷ் மிரட்டியுள்ளனர். தாங்கள் கொண்டு வந்திருந்த கத்தியால் விக்னேஷ் உடலில் பல இடங்களில் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். மேலும், பொம்மை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர்.
பொம்மை துப்பாக்கியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இதனால் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு கார்களில் தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெங்கமேடு போலீஸார் விக்னேஷ் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தப்பி ஓடிய மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பொம்மை துப்பாக்கியால் சுட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.