திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூரில் இன்றும், நாளையும் கோடை விழா நடைபெற உள்ளது.
கோடை விழா நடைபெறும் வளாகத்தில் அலங்காரப் பணிகள், ஜெனரேட்டர் வசதி, ஒலி ஒளி அமைப்பு, பொது இடங்களில் வரவேற்பு வளைவுகள், நிகழ்ச்சிகள் விவரம் குறித்த பேனர்கள் அமைக்கபட அமைக்கப்பட்டுள்ளது.
கோடை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பறை, உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவில் அனைத்து துறைகளின் மூலமாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காவல் துறை மூலமாக அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த கண்காட்சியில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறையின் சிறப்பான மலர் மற்றும் காய்கறி கண்காட்சி, ஜவ்வாதுமலையில் விளையும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள் அடங்கிய விற்பனை சந்தையும் அமைக்கப்பட்டுள்ளது.
கோடை விழா அரங்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் தொடர்ந்து நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். சுகாதாரத் துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம், 108 ஆம்புலன்ஸ் சேவை, கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நாய் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
கோடை விழா நடைபெறும் இரண்டு நாட்களும் அனைத்து அரங்குகளும் காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி முதல் பொது மக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.