“முதலிரவு ரொம்ப முக்கியமா.. முதல்ல மொய்க்கணக்கை குடுத்துட்டு போ” என்று முதலிரவுக்கு செல்ல இருந்த மகனை பெற்ற தந்தை தடுத்து நிறுத்திவிட்டார்.
அறையில் புதுப்பொண்டாட்டி காத்திருக்க.. அப்பாவை கட்டையால் அடித்து கொன்றே விட்டார் மகன்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் ஆதிச்சனூர் என்ற கிராமம் உள்ளது.
இங்கு வசித்து வந்தவர் சண்முகம். இவரது மகன் இளமதிக்கு 2 நாட்களுக்கு முன் அதாவது 14-ம் தேதி தடபுடலாக கல்யாணம் ஆனது.
அன்றைய தினமே யார் யார், எவ்வளவு மொய் செய்திருக்கிறார்கள் என்று அப்பாவும், மகனும் உட்கார்ந்து ஒரு நோட்டு எடுத்து குறித்து கொண்டு வந்தனர். ஆனால் கணக்கு இடித்தது.
ஒவ்வொரு முறை கணக்கு சரியா என்று இருவருமே மாறி மாறி பார்த்தனர். அப்போதும் ஒருத்தருக்கும் போட்ட கணக்கு வேறாகவும், வந்த பணம் வேறாகவும் இருந்தது. இப்படியே நேரமாகிவிட்டது… முதலிரவுக்கு மாப்பிள்ளைக்கு டைம் ஆகிவிட்டது.
அதனால் அப்பாவிடம், காலைல இந்த கணக்கை பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு, ரூமுக்குள் போக முயன்றார்.
உடனே அப்பாவுக்கு கோபமாகிவிட்டது. “இன்னும் இங்க கணக்கு முடியல.. முதலிரவு ரொம்ப முக்கியமா இப்போ.. கணக்கு சரிபண்ணி தந்துட்டு, அப்பறமா ரூமுக்குள்ள போ” என்றார் அப்பா.
இது வாக்குவாதமாக மாறி.. தகராறாக உருவெடுத்து.. கடைசியில் கட்டையை தூக்கி அடிக்கும் அளவுக்கு போய்விட்டனர்.
முதலில் கட்டையை எடுத்து மகனை அடிக்க போனது அப்பாதான். இதனால் மகனுக்கு இன்னும் கோபம் அதிகமாகி, அதே கட்டையை திருப்பி வாங்கி அப்பாவின் தலையில் ஓங்கி மடார் என்று ஒரு போடு போட்டுள்ளார். புதமாப்பிள்ளை இளமதி.
இதில் அப்பா கீழே விழுந்தவர்தான்.. எழவே இல்லை. பதறி போன குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு போன் பண்ணி வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.
ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள். இது சம்பந்தமாக குடும்பத்தார் உடையார்பாளையம் போலீசில் புகார் தரவும், வழக்கு பதிவு செய்யப்பட்டு மகன் இளமதியை கைது செய்து அழைத்து சென்றனர்!
கடைசில கணக்கும் டேலி ஆகலை.. முதலிரவும் போச்சு.. அப்பாவும் செத்துப் போய்ட்டாரு.. இளமதிக்கு இது தேவையா!
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பà¯à®¤à¯ மாபà¯à®ªà®¿à®³à¯à®³à¯ˆ இளமதி. அவரà¯à®•à¯à®•௠இலà¯à®²à¯ˆ மூலையில௠மதி. தேவை நலà¯à®² பà¯à®¤à¯à®¤à®¿à®®à®¤à®¿. à®®à¯à®¤à®²à®¿à®°à®µà¯ˆ அனà¯à®ªà®µà®¿à®•à¯à®•à¯à®®à¯ ஓவர௠ஆசையில௠சொநà¯à®¤ அபà¯à®ªà®¾à®µà¯ˆà®¯à¯‡ கொனà¯à®±à¯à®µà®¿à®Ÿà¯à®Ÿà¯ சிறை செனà¯à®±à®¿à®°à¯à®•à¯à®•ிறாரà¯. à®à®¤à¯‹ கணà¯à®£à¯ˆ மறைகà¯à®•à¯à®®à¯ எனà¯à®ªà®¾à®°à¯à®•ளà¯. இதில௠பாவம௠பà¯à®¤à¯ மணபà¯à®ªà¯†à®£à¯ தானà¯. இளமதி கொஞà¯à®šà®®à¯ அடகà¯à®•ி வாசிதà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•லாமà¯. இபà¯à®ªà¯‹à®¤à¯ நஷà¯à®Ÿà®®à¯ அவரà¯à®•à¯à®•à¯à®¤à¯à®¤à®¾à®©à¯‡.