திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க சார்பில் பாராட்டு விழா நடந்தது.
செங்கோட்டை அரசு ஆரியநல்லூர் துவக்கப் பள்ளியில் வைத்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க செங்கோட்டை கிளையின் செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கிளைத்தலைவர் கந்iதாயபிள்ளை தலைமைதாங்கினார். செயற்குழு உறுப்பினர் அழகுமுத்து முன்னிலைவகித்தார். துணைத்தலைவர் இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். இராஜகோபால்பாண்டியன் இறைவணக்கம் பாடினார். ஆறுமுகம்பிள்ளை குறள் விளக்கம் வாசித்தார். துணைச்செயலாளர் இளஞ்செழியன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் செண்பகக்குற்றாலம் வரவு-செலவு கணக்கு சமர்ப்பித்தார். துணைத்தலைவர் இராமசாமி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து நூறாண்டுகள் பழமைவாய்ந்த அரசு ஆரியநல்லூர் துவக்கிப்பள்ளி துவக்க காலத்தில் 14 ஆசிரிய பெருமக்களுடன் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்துள்ளனர். இந்த பள்ளியில் கடந்த சில வருடங்களாக மாணவர்கள் சேர்க்கை விகிதம் படிபடியாக குறைந்து வந்தது.
கடந்த ஆண்டில் 7மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர். இதனால் பள்ளி மூடுவிழா காணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் பள்ளி தலைமைஆசிரியர் கிளமென்ட்ரெஜீஸ் தீவிர முயற்சியால் தற்போது மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து இந்தாண்டு 35 மாணவர்கள் கல்வி பயிலும் நிலைக்கு உயர்த்தி உள்ளார்.
அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியர் கிளமென்ட்ரெஜிஸ்க்கு மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் விருது வழங்கி கௌரவபடுத்தினார்.
இந்நிலையில் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கூட்டத்தில் கிளைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் தலைமைஆசிரியரை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிள் ஆறுமுகம், சுப்பையா, வேம்பு, முத்துப்பாண்டி, பெருமாள், பரமசிவன், எலிசபெர்ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் துணைச்செயலாளர் பொன்.சொர்ணவேலி நன்றி கூறினார்.