நெல்லையில், திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
நெல்லையை சேர்ந்த முன்னாள் மேயரும், திமுக முக்கிய பிரமுகருமான உமா மகேஸ்வரி. ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது அவரது கணவர் முருக சங்கரன்(65)மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு விட்டு தப்பி ஓடினர்.
இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
திமுக சார்பில் போட்டியிட்ட உமா மகேஸ்வரி கடந்த 1996-2001ம் ஆண்டு வரை நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.