பெண்ணுக்கு திருமணமாக வேண்டுமா? சிறப்பு பூஜை! நகையை அபேஸ் செய்த போலி சாமியார்!

samiyar

சென்னை: திருமணமாகாத பெண்களை குறிவைத்து 100 பவுன் வரை நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைந்தகரை பொண்ணுவேல் பிள்ளை தோட்டம் 5 வது தெரு பகுதியில் போலி சாமியாராக இருந்தவர் ஆனந்தன்(24).

இவர் திருமணமாகாத பெண்களுக்கு சிறப்பு பூஜை செய்வதாக கூறி வீட்டில் பூஜை செய்யும் போது தங்க நகைகளை கொண்டு வந்து பூஜையில் வைக்க சொல்லிவாராம்.
அந்த நகையை 21 நாள் கலசத்தில் இருந்து வெளியே எடுக்க கூடாது எனக் கூறிவிட்டு லாவகமாக திருடி சென்றுள்ளார்.

அந்தப் பகுதியில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி 100 பவுன் நகை வரை நூதன முறையில் திருடியுள்ளார்.பின்னர் அதே பகுதியில் உள்ள நகைக் அடகு கடையில் வைத்து தான் வாங்கிய கடன் அடைக்க இந்த அடகு பணத்தை ஆனந்தன் செலவழித்துள்ளார்.

பின்னர் இவரை கைது செய்து அமைந்தகரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :