
நடிகர் ஜோசப் விஜய் ரசிகர்களுக்கு சிலுவை வழங்குவதன் மூலம் மதமாற்ற பிரசாரம் செய்கிறார் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிகில் படத்தின் டிக்கட் விற்பனையின் போது காவி வேட்டி, கறுப்பு சட்டை ஒரு சிலுவை ஆகியவை வழங்கப்படுவது பற்றி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்ததாவது.
விஜய் அவருடைய தகப்பனார் சந்திரசேகர், பிகில் படத்தின் தயாரிப்பாளர்,அந்த படத்தின் இயக்குனர் இவர்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அந்த பிகில் படத்தோட மார்க்கெட்டிங் அவர்கள் பண்ணுகிறார்கள். அது அவர்கள் உரிமை பண்ணட்டும். ஆனால் மார்க்கட்டிங் பண்ணும் போது என்ன பண்றாங்கண்ணா நம் அனைவருக்கும் தெரியும் இந்த தமிழ் சமுதாயம் சினிமாவின் தாக்கம் நிறைந்தது, ரஜினி ஒரு ஸ்டைல் பண்ணினால் வாழ்க்கை முழுதும் அதை நினைத்துக்காெண்டு இருப்பான். எம்.ஜி.ஆர் ஒரு சட்டை அணிந்து வந்தால் அதேபோல சட்டை அணிவான். குஷ்புவுக்கு கோவில் கட்டியவர்கள். குஷ்பு இட்லி பேமஸ், சிம்ரன் சேலை, ரிபன் இதெல்லாம் பேமஸ்.
இப்ப பிகில் படத்தின் டிக்கெட் வேண்டும் என்றால் விஜய் அந்த படத்தில் வரும் ஒரு கெட்டப்புக்கான துணியை வாங்க சொல்கிறார்கள். ஒரு காவி வேட்டி, சட்டை, அத்துடன் ஒரு சிலுவை ஆகியவற்றை வாங்க சொல்கிறார்கள். அவர்கள் என்ன நோக்கத்தில் வாங்க சொல்கிறார்கள் தெரியவில்லை. ஆனால் விஜய்க்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமிகள் இருக்கிறார்கள். அவர்கள் படத்தில் விஜய் செய்வது போல அவர் அணிவது போல துணிமணிகளை அணிவது, என இருக்கிறார்கள். அவர்களிடம் இப்படி மதச்சின்னத்தை வழங்குவதுதான் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இது தவறான அணுகுமுறை.

அவர் கிறிஸ்தவராக இ ருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதை அவரே பெருமையாக சொல்லிக்கொள்கிறார். தன்னை ஜோசப் விஜய் என அவரே பெருமையாக சொல்லக்கொள்கிறார். அதிலும் தவறில்லை. ஆனால் அவர் சங்கீதா என்ற சகோதரியை திருமணம் செய்து கொள்கிறார். உடனடியாக அவர் பெயரை ஜோசபின் என மாற்றுகிறார்.
இதில் தான் நாங்கள் வருத்தம் அடைகிறோம். கிறிஸ்தவ மதமாற்றத்துக்கான பிராண்ட் அம்பாசிடராக அவர் செயல்படுகிறார். ஏற்கனவே மோகன் சி.லாசரஸ், டி.ஜி.எஸ் தினகரன் போன்றவர்கள் குருடர்கள் பார்க்கிறார்கள். செவிடர்கள் கேட்கிறார்கள். முடவர்கள் நடக்கிறார்கள் என பிரசாரம் செய்து வருகிறார்கள். நக்மாவை கொண்டுவந்து பைபிள் படிக்கவைத்து பரப்புகிறார்கள்.
அதே போன்று அரசியல் தலைவர்களை கொண்டு வந்து பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறார்கள். இப்போது, கிறிஸ்தவ மத சின்னமான சிலுவையை எல்லார் கழுத்திலும் தொங்க விடுவதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்து கிறீர்களா? சினிமாவின் தாக்கம் அதிகம் உள்ளவன் தமிழன் ஏற்கனவே குமரி மாவட்டத்தில் மதமாற்றம் காரணமாக இந்துக்கள் சிறுபான்மையாகி விட்டார்கள். எங்கள் இளம் பெண்கள் பாெட்டு இல்லாமல் பூ இல்லாமல் திரிய ஆரம்பித்து விட்டார்கள்.
விஜய் இதை தெரிந்து செய்கிறாரா? தெரியாமல் செய்கிறாரா? தெரியவில்லை. விஜய்யாக இருக்கட்டும், அவர் அப்பா சந்திரசேகராக இருக்கட்டும். நீங்கள் யாருக்கோ ஆயுதமாக செயல் படுகிறீர்கள். போப் தமிழகம் வந்தபோது, 2020க்குள் இங்கு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்குவோம் என்றார். அந்த திட்டத்தின் ஒரு பகுதியா இது.
பள்ளிக்கூடத்தில் மதமாற்ற பிரசாரம் செய்தார்கள். இப்போது சினிமாவை வைத்து மதமாற்றம் செய்கிறார்கள். பள்ளிகளில் இந்து மதத்தை இழிவு படுத்தி குழந்தைகள் மனதில் விசத்தை விதைக்கிறார்கள். இப்போது சினிமா நடிகர்களை பயன்படுத்துகிறார்கள். நக்மா ராமராஜன் போன்றவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாக மத பிரசாரம் செய்கிறார்கள். முருகா முருகா என நடித்த ஏவிஎம் ராஜன் கிறிஸ்தவ மதப்பிரசாரம் செய்கிறார்.
இப்போது ஜோசப் விஜய் மதரீதியாக தன் மதத்தை பரப்ப சிலுவை கொடுக்கிறார். இது மதம்தான். அவர் தனது மதத்தை பரப்ப சிலுவை கொடுக்றார். சந்திரசேகர் சிறந்த சிவ பக்தர் அவரே இப்படி செயல்படுவது சரியல்ல.
அவரிடம் நான் நேரில் சொல்ல இருக்கிறேன். விஜயிடமே நேரில் சென்று இதை சொல்ல இருக்கிறேன். அப்பாவி தமிழன் கழுத்தில் ஏன் சிலுவையை திணிக்கிறீர்கள். .. இவ்வாறு அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்