Home உள்ளூர் செய்திகள் சென்னை 15- 50 ஆயிரம் வரை சம்பளம்… நாளை கடைசி நாள்! விண்ணப்பித்து விட்டீர்களா?

15- 50 ஆயிரம் வரை சம்பளம்… நாளை கடைசி நாள்! விண்ணப்பித்து விட்டீர்களா?

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (cmda) காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டெண்ட், ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3, தட்டச்சர், ஃபீல்டுமேன், மெசன்ஜர் உள்ளிட்ட 131 பணியிடங்களுக்கு பணிகளுக்கான விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். 15 ஆயிரம் ரூபாய் 50 ஆயிரம் வரைசம்பளம் கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி வாரியாக விவரங்கள்
சென்னை மாநகாட்சியில் மொத்தம் 131 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஜூனியர் அசிஸ்டெண்ட் – 342.
ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3 – 243.
தட்டச்சர் – 104.
ஃபீல்டுமேன் – 195.
மெசன்ஜர் – 44

கல்வித்தகுதி
ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3 பணிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் தட்டச்சு (ஆங்கிலம், தமிழ்) முடித்திருக்க வேண்டும்

தட்டச்சர் பணிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதடன் அத்துடன் தட்டச்சு (ஆங்கிலம், தமிழ்) முடித்திருக்க வேண்டும்
ஃபீல்டுமேன் பணிக்கு பத்தாம் வகுப்பில் படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். சைக்கிள் ஓட்டத்தெரிந்தவராக இருக்க வேண்டும்.

மெசன்ஜர் பணிக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க
ஆன்லைனில், https://www.cmdarecruitment.in/ அல்லது http://www.cmdachennai.gov.in/ – என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். ஆனால் ஆன்லைனில் விண்ணப்பிக்க திங்கள்கிழமை நாளை கடைசி நாளாகும் ( 24.02.2020). எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணபிப்பது பலன் அளிக்கும்.

50 ஆயிரம் சம்பளம்
அரசு வேலை என்றாலும் சம்பளம் எவ்வளவு என்பது எல்லோருக்கும் முக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் ஜூனியர் அசிஸ்டெண்ட், ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3, தட்டச்சர், ஃபீல்டுமேன், மெசன்ஜர் உள்பட ஒவ்வொரு பணிகளை பொறுத்து ஊதியம் மாறுபடும். பணிகளை பொறுத்து ரூ.15,700 முதல் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மாத சம்பளமாக கிடைக்கும்.

முழு விவரம்
சென்னை மாநகாட்சி பணிகள் குறித்து இதை தவிர கூடுதல் விவரம் உங்களுக்கு தெரிந்து கொண்டும் என்று விரும்புகிறீர்களா.. அப்படி என்றால் நீங்கள் https://www.cmdarecruitment.in/cmda-directrecruitment2020.pdf – என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version