spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?மகாளய அமாவாசையைத் தடுத்த ஆட்சியாளர்க்கு... மகாசாபம் கொடுத்த மக்கள்!

மகாளய அமாவாசையைத் தடுத்த ஆட்சியாளர்க்கு… மகாசாபம் கொடுத்த மக்கள்!

- Advertisement -
mahalaya amavasai in mylapore
mahalaya amavasai in mylapore

ஹிந்து விரோத திமுக., அரசின் அராஜகம்!

மஹாளய அமாவாசையை முன்னிட்டு தங்களின் குழந்தைகள் நலம் வேண்டி, முன்னோருக்கு திதி தர்ப்பணம் செய்யும் வழக்கத்தை நீண்ட நாட்களாக ஹிந்துக்கள் (அனைத்து சாதியினரும்) தங்களது வழக்கமாக, கடமையாக, உரிமையாக, நம்பிக்கையாக கடைபிடித்து கொண்டிருக்கும் நிலையில், இன்று அவர்களது உரிமைகள் இன்று மறுக்கப்பட்டும், மிதிக்கப்பட்டும் வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மயிலாப்பூரில் இன்று கபாலி கோவில் குளத்திற்கு மக்கள் வந்த வண்ணம் இருந்தபோதும், காவல்துறையினர் அங்கு அனுமதிக்கவில்லை.

இதனால் மக்கள், கோவிலை ஒட்டிய பல்வேறு தெருக்களில் பல இடங்களில் தங்களது கடமையை நிறைவேற்ற வரிசையில் நின்று பரிதவித்து வருகின்றனர்.

மேலும், இன்று காலை அந்த தெருக்களில் இருந்த பொதுமக்களிடம், காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், மக்கள் கைகளில் இருந்த பழம், தேங்காய் உள்ளிட்டவைகளை தட்டி பறித்து கீழே தள்ளியதாகவும் சொல்லப்படுவது, இந்த அரசு அரக்கத்தனமாக நடந்து கொள்வதையே வெளிப்படுத்துகிறது.

தொடர்ந்து மக்கள் வரிசையில் நின்று தங்களின் கடமையை செய்து வருகிறார்கள்.

சினிமா ஷூட்டிங்கிற்கு கடற்கரையை பயன்படுத்த அனுமதிக்கும் தமிழக அரசு, மக்களின் நம்பிக்கைகளை அவமதித்து, மிதித்து அவமானப்படுத்துவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.

பாதிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட மக்கள் இந்த அரசின் ஹிந்து விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறார்கள். மக்களின் கலாச்சாரத்தை, நம்பிக்கைகளை அழித்து விட்டால் ஹிந்து மதத்தை வேரறுத்து விடலாம் என தி மு க அரசு நினைக்குமேயானால், அது பகல் கனவாக தான் முடியும்.இதற்கு இந்த தி மு க அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அரசன் அன்று கொல்வான் என்பதற்கேற்ப இன்று மக்களின் நம்பிக்கைகளை அழித்து விட்டதாக நினைத்து கொக்கரிப்பவர்கள், தெய்வம் நின்று கொல்லும் என்பதை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  • நாராயணன் திருப்பதி
mahalaya amavasai in mylapore1
mahalaya amavasai in mylapore1

மஹாளய அமாவாசையன்று பாமர மக்கள்கூட காலையில் குளித்துவிட்டு கையில் பூ பழம் தேங்காய் என்று எடுத்துக்கொண்டு சாரி சாரியாக பெருந்திரளாக கடற்கரைக்கு வருவதை எனது காலை வாக்கிங்கின் போது பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். பாமரர்கள்கூட பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதை கடமையாக (மஹாளயத்தில்) கொண்டிருப்பதை பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் இந்த அரசு அதற்கும் தடை விதித்து ஆனந்தமடைந்திருக்கிறது. மக்களை ஏமாற்றி பதவியில் அமரலாம். ஆனால் அவனுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வரத்தான் போகிறது. அப்போது துர்கா பூஜையும் பலன் தராது. எந்த பூஜையும் பலன் தராது.

~ அருள் சிவசங்கரன்


புரட்டாசி மஹாளய அமாவாசை தமிழனின் பரிதாபங்கள்!!!!!!உள்ளுர் பார்ப்பானை விரட்டிவிட்டு, எந்த ஆற்றங்கரை, மரத்தடியில பாப்பான் கிடைப்பானு அலைய வேண்டியது.. ஆத்தங்கரைக்கு போனா சொச்ச பாப்பானையும் தமிழன் கண்ணுல படாம கவனமாக பந்தோபஸ்து போட்டு காவல் காக்குது விடியல் அரசு.. அக்ரஹாரம் அழிந்தாலும் இதுக்கு தாண்டா ஒவ்வொரு ஊருலயும் பஞ்சாங்கம் ஐயரு (வைதீக பிராமணர்) சிவாச்சார்யர் (குருக்கள் அல்லது ஆதிசைவர்), பட்டாச்சாரியர் என நம்ம பாட்டனுங்க சில பாப்பான் குடும்பத்தையாவது காப்பாத்தி வச்சானுங்க. எல்லா சாதி சனத்துக்கும் அவுங்கவுங்க குடும்ப, குல குருன்னு வச்சி நல்லது, கெட்டதை பராமரிச்சானுங்க.. போய் ஆறு, மரமுன்னு அலையாம உங்க குடும்பம், ஊருக்குன்னு உண்டான பாப்பானை தேடி கண்டுபிடித்து அவன கூட்டிக்கிட்டு வாங்க .உங்கள பிரிஞ்ச பாவத்துல அவனும் IT கம்பெனியில நிம்மதி இல்லாம இருப்பான், அவங்கிட்ட உங்க அரிசி, பருப்பு, காய்கறிய கொடுங்க.. அதுவரை தமிழனின் பித்ரு தோஷம் தீராது..

~ சேது அரவிந்த்


இன்று அதிக அளவில் சமூகத் தளப் பதிவுகள் தர்ப்பணம் செய்வதற்கு அரசு தடைவிதித்தது என்று! இஸ்லாமிய மக்கள் பல இடங்களில் அவர்களின் தொழுகையை பொது இடங்களில் நடத்தி தங்கள் பலத்தை காட்டுகிறார்கள். அவர்களிடம் ஒற்றுமை உள்ளது, அதனால் அது சாத்தியமானது. அதை நான்ஆதரிக்கவில்லை. ஆனால் அவர்களின் ஒற்றுமை தான்உதாரணம்.

அவர்கள் தொழுகை நடத்தும்மத குருவை கைது செய்ய முடியுமா? அவர்கள் அனைவரும் அந்த குருவுக்குஆதரவாக இருப்பார்கள். ஆனால் நம் மக்கள் தினமும்பாப்பான் ஒழிக என்று சொல்லி விட்டு அமாவாசை அன்று மட்டும் வாங்க அய்யரே, சாமி என்பதால் தான் இந்த நிலை.

அதேபோல் எங்காவது ஒரு இடத்தில் அய்யர் எல்லோரையும் அழைத்து தர்பணம் கொடுக்க ஏற்பாடுசெய்தால் அதை காவல்துறைஅந்த அய்யரை கைது செய்தால் போதும். யாரும் அவருக்கு துணை வரப்போவதில்லை. தங்களுக்கும் அரசை எதிர்த்து இஸ்லாமிய மக்கள் போல் தங்கள் பலத்தை காட்ட தெரியவில்லை.

தங்களுக்கு செய்து வைக்க வருபவருக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கும் வக்கில்லை. இப்படி ஒரு கோழைகள் தந்தைக்கு தர்ப்பணம் கொடுத்தாலென்ன கொடுக்காவிட்டால் நமக்கென்ன.

ஏளனமாக பார்ப்பனன் என்று கூறிக் கொண்டே இனி இருக்கும் அவலம் தான். தன் தந்தை தாயின் தர்ப்பணம் செய்வதற்கு கூட அனுமதி கிடையாது என்று சொல்லும் அரசை எதிர்ப்பதற்கு தைரியம் இல்லாததால் தான் கோயில்வாசலில் “கடவுள் இல்லை”என்று எழுதும் துணிவு அவர்களுக்கு வந்தது.

ஓட்டு போட்டயில்ல! ஆண்டில் ஒரு நாள் அப்பன் ஆத்தாளுக்கு சாந்தி செய்வதற்கு கூட அனுமதி கிடையாது! வெச்சாம்பாரு ஆப்பு! அழுவுங்கடா!

~ ரவிச்சந்திரன் ஸ்ரீனிவாசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe