40கோடி பணத்தை அபகரிக்க நடந்த தம்பதியர் கொலை …

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

40கோடி பணத்தை அபகரிக்க நடந்த சென்னை மயிலாப்பூர்,தம்பதியர் கொலை இன்று இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர
பிருந்தாவன் நகர், துவாரகா காலனியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(60). ஆடிட்டர். அவரது மனைவி அனுராதா(55). அவர்களை கொலை செய்துவிட்டு, தப்பி செல்ல முயன்ற கார் டிரைவர் லால் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளி ரவி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ தங்கம், 50 கிலோ வெள்ளி நகைகள், 10 வைர மூக்குத்திகள், பிளாட்டினம் மற்றும் பணம் என ரூ.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நில விற்பனை தொடர்பாக ரூ.40 கோடியை பரிவர்த்தனை செய்வதை லால் கிருஷ்ணாவுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் வீட்டிலேயே ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவை, தனித்தனியாக உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். வீட்டில் ஏராளமான நகைகள் இருந்தது, லால் கிருஷ்ணாவுக்கு தெரியவந்துள்ளது. சாவி இல்லாததால், தம்பதி அமெரிக்காவில் இருந்து வரும் வரை காத்திருந்து கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீசாரிடம் மாட்டுவதற்கு முன்னர் நேபாளம் தப்பி செல்ல திட்டமிட்ட குற்றவாளிகள், வீட்டில் இருந்த சிசிடிவி காட்சி பதிவாகும் ஹார்ட் டிஸ்க்களை கழற்றி எடுத்து சென்றனர். இருவரையும் கொலை செய்வதற்கு முன்பாகவே ஆடிட்டரின் பண்ணை வீட்டில் உடல்களை புதைப்பதற்கு குழி தோண்டி வைத்ததும் போலீசார் விசாரணையில்ஸ தெரியவந்தது. லால் கிருஷ்ணாவின் மொபைல் போனை டிராக் செய்ததில், சில மணி நேரத்தில் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் பிடிபட்டதாக சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறினார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
IMG 20220508 214224 - 2026
கொலைசெய்யப்பட்ட தம்பதியர்

Related articles

Recent articles

spot_img