ஆம்னிபஸ்களில் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு..

1745230 omni buses - Dhinasari Tamil

மூன்று நாட்கள் விடுமுறை ஆம்னிபஸ்களில் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த வாரம் நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி திங்கட்கிழமையும் விடுமுறை என்பதால் வெளியூரில் இருப்பவர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். தொடர் விடுமுறைகள் கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது. இதையடுத்து ஆம்னி பஸ் மூலம் பயணம் மேற்கொள்ள பலர் முன்பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பஸ் கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800 வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2,300 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கோவைக்கு வழக்கமாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 3000 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக 1400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3500 வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
74FollowersFollow
0FollowersFollow
3,916FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-
Exit mobile version