
நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் தலைமை அர்ச்சகர் வியாழக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் அக்ரஹார வீதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(55). ஆஞ்சனேயர் மற்றும் நரசிம்மர் கோயில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னையால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் கோயிலுக்கு செல்ல அவருடைய மனைவி எழுப்பிய நிலையில், கழிவறைக்கு சென்றவர் அங்குள்ள ஜன்னலில் தான் அணிந்திருந்த துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.