குடியாத்தம் அருகே தண்ணீர் தொட்டியில் மூச்சுத் திணறி இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டடில், தண்ணீர் தொட்டியில் சென்ட்ரிங் பிரிக்கும் போது மூச்சுத் திணறி இருவர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு இஸ்லாமியர் பள்ளி தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கட்டட தொழிலாளர்கள் வெங்கடேசன், முருகன், மேலும் இரு செண்டரிங் பிரிக்கும் வேலை செய்து வந்தனர்.
அப்போது வீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தண்ணீர் தேக்கி வைக்கும் டேங்கில் செண்டரிங் பிரிப்பதற்காக வெங்கடேசன்( 50), முருகன்( 44) தண்ணீர் தொட்டியில் இறங்கிய நிலையில், இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் மேலும் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது
மயங்கி விழுந்த மூன்று பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் மற்றும் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் முருகன் என்பவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து பேர்னாம்பட்டு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.