கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் .திருவள்ளூர் பாலியல் புகாரில் கைதான பள்ளி தாளாளர் வினோத்துக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் (34). இவர், அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து தங்களது பெற்றோருடன் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து, பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத்தை போலீசார் கைது செய்தனர்.
கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டில் கைதான பள்ளி தாளாளர் வினோத்துக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.