
கவர்னர்- ஆளும் கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள பல வரிகளை கவர்னர் வாசிக்கவில்லை.
மேலும், முதல் அமைச்சர் உரை வாசித்தபோது கவர்னர் பாதியிலேயே வெளியேறி சென்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னரின் இந்தகைய செயலுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த நிலையில் கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் திமுக வைத்த பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. கவர்னர்- ஆளும் கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் சரிவர வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து, டுவிட்டர் பக்கத்தில் ஆளுநருக்கு எதிராக #GetOutRavi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டேக்கில் திமுகவினர் அனல் பறக்கும் விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர். ட்விட்டரில் ட்ரெண்டிங்கான #GetOutRavi என பதிவிட்ட அனைவருக்கும் நன்றி என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.