
உத்தரப்பிரதேசத்திலிருந்து ஜாக்குவார் காரில் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு சென்னை வந்த நால்வர்களில் இருவர் சிக்கினர்.மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈசிஆர் சாலையில் ஒரு வீட்டில் ரூ.1,000 மற்றும் இரண்டு ஜோடி செருப்புகளைக் கொள்ளையடித்த நிலையில் காவல்துறையிடம் சிக்கியுள்ளனர்.
இந்த ஜாக்குவார் கார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபருடையது என்பதும், சரியாக மாதத் தவணை செலுத்தாததால், பறிமுதல் செய்துவிடுவார்களோ என்று ரௌடிகளிடம் அவர் இந்தக் காரை கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்த கொள்ளையர்கள் புனித் குமார் மற்றும் ராஜேஷ் குமார் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டள்ளனர். தலைவனாக செயல்பட்ட இர்ஃபான் மற்றும் சுனில் குமார் யாதவை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இர்ஃபான் மனைவி பஞ்சாயத்துத் தலைவராக இருப்பதாகவும், அவர் கொள்ளையடித்துச் செல்லும் பொருள்களை எல்லாம், கிராமத்தில் இருக்கும் ஏழைகளுக்கு அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்துவது, கண் சிகிச்சைக்கு நன்கொடை அளிப்பது போன்றவற்றில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இர்பான் நாடு முழுவதும் பல்வேறு கொள்ளை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இவர் தனபால் சிங்கிடமிருந்து ஜாகுவார் காரை வாங்கியுள்ளனர்.
பிறகு இந்த ஜாகுவார காரை எடுத்துக் கொண்டு சென்னை வந்து இங்குள்ள தொழிலதிபர்களின் வீடுகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி சென்னை வந்து நீலாங்கரையில் உள்ள வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.
பிப்ரவரி 6ஆம் தேதி இர்பான் தனது கூட்டாளிகளுடன் ஒரு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால் காவலாளி கூச்ச