
தமிழ்நாடு பாஜக வில் அடுத்தடுத்து விலகல் ராஜினாமா சம்பவம் நிகழ்ந்து வரும் நிலையில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகள் இன்று கூண்டோடு பாஜகவில் இருந்து விலகி உள்ள சம்பவம் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பாஜக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியிலிருந்து இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணனும், அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், பாஜகவின், சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பு பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவைச் சேர்ந்தவர்கள் கூண்டோடு பாஜவில் இருந்து தற்போது விலகி உள்ளனர். இதன்படி மாவட்ட தலைவர் அன்பரசு, மாவட்ட துணைத் தலைவர்கள் சரவணன் மற்றும் ஸ்ரீராம் உள்ளிட்ட 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி உள்ளனர்.இச்சம்பவம் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பாஜக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.