
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இறந்த வேர்களில் இரு பெண்கள் அடங்குவர்
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பட்டாசு ஆலை குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டது. அதில், 8 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

வெடிவிபத்து காரணமாக அங்கிருந்த 4 கட்டடங்கள் தரைமட்டமாகின. மற்றொரு கட்டடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டனர்.விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் என்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தொழிலாளர்களுடன் ஆலையின் உரிமையாளர் சுதர்சன் (31) உயிரிழந்துள்ளார். பட்டாசு ஆலை விபத்தில் படுகாயம் அடைந்த 10 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடிவிபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.