
காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டதில் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் என்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்தில் 5 பேரும், மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்திருந்தனர். பட்டாசு ஆலை விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா (வயது 44) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெடிவிபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர்களுள் ஒருவரான நரேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். பட்டாசு ஆலையின் மற்றொரு உரிமையாளர் சுதர்சன் (31) வெடி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில்,இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியானார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் துயறுற்றேன்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.