
சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
14 தளங்கள் கொண்ட சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டிடத்தின் மேல்தளத்தில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எல்ஐசி பெயர்ப்பலகையில் தீப்பிடித்துள்ளது.
இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.