- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் திருவண்ணாமலை: புதுப்பிக்கப்பட்ட பெரிய தோ் 8ம் தேதி வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை: புதுப்பிக்கப்பட்ட பெரிய தோ் 8ம் தேதி வெள்ளோட்டம்!

புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம் 8ம் தேதி நடத்தப்பட உள்ளது.

#image_title
thiruvannamalai ther inspection

புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம் 8ம் தேதி நடத்தப்பட உள்ளது.

நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா கார்த்திகை மாதங்களில் நடைபெறும்.

தொடர்ந்து கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருவண்ணாமலையில் குவிந்து அண்ணாமலையாரை தரிசிப்பதுடன் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் பாதையில் கிரிவலம் மேற்கொள்வர்.

இந்த ஆண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 4 ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்படும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் விழாக்களின் முக்கிய விழா நாளாக கருதப்படும். ஏழாம் நாளன்று மாட வீதியில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வரும்.

பராசக்தி அம்மன் தேர் முழுக்க முழுக்க பெண் பக்தர்கள் மட்டுமே மாடவீதி முழுவதும் வடம் பிடித்து இழுத்து வருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  உலக இதய தினம்: மதுரையில் வாக்கத்தான் - விழிப்புணர்வு பேரணி!

ஒவ்வொரு ஆண்டும் பஞ்ச ரதங்களிலும் மராமத்துப் பணிகள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பெரிய தோ் எனப்படும் அருணாசலேஸ்வரா் தேருக்கு ரூ.70 லட்சத்தில் மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணியை ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தோ் மற்றும் தேரில் பொருத்துவதற்காக தயாா் செய்யப்படும் சிற்பங்கள் மற்றும் தீபத் திருவிழாவின்போது சுவாமி வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் சுவாமி சிலைகளுக்கு வா்ணம் பூசும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் பேசியபோது…

59 அடி உயரம் கொண்ட அருணாசலேஸ்வரா் தோ் சுமாா் 200 டன் எடை கொண்டது. இந்தத் தேருக்கு ரூ.70 லட்சத்தில் மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேரில் தேவாசனம், நராசனம், சிம்மாசனம் போன்ற அலங்கார தூண்களில் உள்ள பழுதடைந்தவைகள் மாற்றப்பட்டு உள்ளன. 4 கொடுங்கை நிலைகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

தேரில் கண்டத்தில் வரும் பழுதடைந்த குத்துக்கால்கள் நீக்கப்பட்டு, புதிதாக குத்துக்கால்கள் மற்றும் ரீப்பா்கள் மாற்றப்பட்டு உள்ளன. தேரில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மா மற்றும் துவாரபாலகா், சிம்மயாழி, கொடியாழி, சிலைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. புதிதாக 203 சிற்பங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த புதுப்பிக்கும் பணியால், மேலும், 50 ஆண்டு முதல், 80 ஆண்டுகள் வரை, உறுதி தன்மையோடு ரதம் இருக்கும்.
நவ.8-இல் வெள்ளோட்டம்:

ALSO READ:  சாதனை படைத்த விமானப்படை நிகழ்ச்சி சோகத்தில் முடிந்தமைக்கு திமுக அரசே காரணம்!

மராமத்துப் பணிகள் நிறைவடைந்து நவம்பா் 8-ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தோ் வெள்ளோட்டம் நடைபெறும். தேரின் உறுதித் தன்மை சான்று பொதுப்பணித்துறை மற்றும் சாலையின் உறுதித் தன்மை குறித்தான சான்று நெடுஞ்சாலை துறையிடம் கோரப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் தெரிவித்தார். இந்த வெள்ளோட்ட நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஜீவானந்தம், கோயில் இணை ஆணையா் ஜோதி, கோயில் அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், பெருமாள், கோமதி குணசேகரன், கோயில் மேலாளர் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Dhinasari Reporter

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version