- Ads -
Home உள்ளூர் செய்திகள் சென்னை கொல்லம் -செகந்திராபாத் சிறப்பு ரயில் (07176) நேரம், வழித்தடம் மாற்றம்!

கொல்லம் -செகந்திராபாத் சிறப்பு ரயில் (07176) நேரம், வழித்தடம் மாற்றம்!

செகந்திராபாத்-கொல்லம் சிறப்புவண்டி(07175) வழக்கம் போல் இயங்கும் என்பதை பயணிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

#image_title
#image_title

கொல்லம்-செகந்திராபாத் சிறப்புவண்டி(07176) நேர & வழித்தட மாற்றப்பட்டுள்ளது.

திண்டுக்கல் திருச்சி வழித்தடத்தில் நடைபெறும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளால் கொல்லம்-செகந்திராபாத் சிறப்புவண்டி(07176) கீழ்கண்ட மாற்றங்களுடன் இயக்கப்படும்.

21.12.24/சனிக்கிழமை கொல்லத்திலிருந்து 05.00 மணிக்குப் பதிலாக 1மணி நேரம் தாமதமாக 06.00 மணிக்குக் கிளம்பும்.

04.01.25/சனி: கொல்லத்திலிருந்து 05.00 மணிக்குப் பதிலாக 2மணி நேரம் தாமதமாக 07.00 மணிக்குக் கிளம்பும். வழியில் 65 நிமிட தாமதமும் அடங்கும்.

11.01.25/சனிக்கிழமை கொல்லத்திலிருந்து சரியான நேரத்தில் 05.00 மணிக்குக் கிளம்பி மாற்று வழித்தடமான மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியே இயக்கப்படும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.

செகந்திராபாத்-கொல்லம் சிறப்புவண்டி(07175) வழக்கம் போல் இயங்கும் என்பதை பயணிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version