சென்னை:
தமிழக சட்டப் பேரவையில் விதி எண் 110 இன் படி 181 அறிவிப்புகளை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் தனபால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை அன்று நிறைவுரையாற்றிய சபாநாயகர் தனபால் பேசியது:
பதினான்காவது சட்டமன்றப் பேரவையின் பத்தாவது கூட்டத் தொடரின் முதல்கூட்டம் 17-2-2015 அன்று தொடங்கி 23-2-2015 வரையும், இரண்டாவது கூட்டம்25-3-2015 அன்று தொடங்கி 1-4-2015 வரையும், மூன்றாவது கூட்டம்24-8-2015 அன்று தொடங்கி இன்று (29-9-2015) வரையும் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தொடர்களின்போது பேரவை நிறைவேற்றிய அலுவல்கள் பின்வருமாறு:பேரவை கூடிய மொத்த நாட்கள் – 29 (ஆளுநர் உரையாற்றிய நாள் உட்பட)அவைக் கூட்டம் நடைபெற்ற மொத்த நேரம் – 157 மணி21 நிமிடங்கள்(3-00 மணி வரை)17-2-2015 அன்று ஆளுநர் பேரவையில் உரையாற்றினார்கள்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்ற மொத்த நாட்கள் – 4
உரையாற்றிய உறுப்பினர்கள் – 26 பேர்
உரையாற்றிய நேரம் – 10 மணி 40 நிமிடங்கள்
அதில் ஆளுங்கட்சியினர் – 7 பேர் பேசிய நேரம் – 2 மணி 15 நிமிடங்கள்
இதர கட்சியினர் – 19 பேர் பேசிய நேரம் – 8 மணி 25 நிமிடம்
இதர கட்சியினருக்குக் கூடுதலாக 6 மணி 10 நிமிட நேரம் பேசுவதற்குவாய்ப்பு கொடுக்கப்பட்டது.
பதிலுரை நேரம் – 1 மணி 15 நிமிடம் நிதி அலுவல்கள்-2015-2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையை 25-3-2015 அன்றுநிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பேரவைக்கு அளித்தார்கள்.
வரவு-செலவுத் திட்டத்தின்மீது பொது விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்ற நாட்கள் – 4
பங்கேற்ற உறுப்பினர்கள் – 25
உரையாற்றிய நேரம் – 10 மணி 12 நிமிடங்கள்
அதில் ஆளுங்கட்சியினர் – 9 பேர்பேசிய நேரம் – 1 மணி 53 நிமிடங்கள்
இதர கட்சியினர் – 16 பேர்பேசிய நேரம் – 8 மணி 19 நிமிடங்கள்
இதர கட்சியினருக்குக் கூடுதலாக 6 மணி 26 நிமிட நேரம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளித்த நேரம் – 1 மணி 38 நிமிடங்கள்மானியக் கோரிக்கைகள்மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்ற மொத்த நாட்கள் – 1854 மானியக் கோரிக்கைகளும் விவாதித்து நிறைவேற்றப்பட்டுள்ளன.உரையாற்றிய உறுப்பினர்கள் – 121
உரையாற்றிய நேரம் – 43 மணி 55 நிமிடங்கள்
அதில் ஆளுங்கட்சியினர் – 35 பேர்பேசிய நேரம் – 9 மணி 12 நிமிடங்கள்
இதர கட்சியினர் – 86 பேர் பேசிய நேரம் – 34 மணி 43 நிமிடங்கள் இதர கட்சியினருக்குக் கூடுதலாக 25 மணி 31 நிமிட நேரம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதா தனது பொறுப்பில் உள்ள துறைகள் சம்பந்தமாகபதிலளித்த நேரம் – 58 நிமிடங்கள்இதர அமைச்சர்கள் பதிலுரையாற்றியமொத்த நேரம் – 25 மணி 40 நிமிடம் வினாக்கள்-விடைகள்:12-8-2014 முதல் 28-9-2015 வரைஉறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்டுஆய்வு செய்யப்பட்ட மொத்த வினாக்கள் – 10386அளித்த உறுப்பினர்கள் எண்ணிக்கை – 67அனுமதிக்கப்பெற்றவை – 10386பத்தாவது கூட்டத் தொடரின்போதுஅவையில் விடையளிக்கப்பட்டவை – 335 மொத்த துணை வினாக்கள் – 640
அவையில் அதிக அளவு வினாக்களுக்கு விடையளித்த அமைச்சர்களில் முதல் ஐந்துநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மின்சாரம், மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தங்கமணி சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் பா.வளர்மதி கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் உணவு, இந்து சமய மற்றும்அறநிலையங்கள் துறை அமைச்சர் காமராஜ்வினாக்கள்-விடைகள் எடுத்துக்கொள்ளப்பெற்றமொத்த நாட்கள் – 2வினாக்கள்-விடைகள் நேரம் நீட்டிக்கப்பட்ட நாட்கள் – 23நீட்டிக்கப்பட்ட மொத்த நேரம் – 6 மணி 24 நிமிடங்கள்
இன்றையதினம், வினாக்கள்-விடைகள் நேரத்தின்போது உறுப்பினர் .கொ.எ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் துணை வினா கேட்கையில், நீண்ட உரையாற்றியபோது,துணைக் கேள்வியை சுருக்கமாகக் கேட்க வேண்டுமென்று நான் அறிவுறுத்தினேன். உடனே முதலமைச்சர் ஜெயலலிதா “உறுப்பினர் ஒரு பேச்சாளர், அவருக்குசுருக்கமாகப் பேச வராது” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்கள். ஒவ்வொருஉறுப்பினரின் நடவடிக்கையையும் அம்மா கூர்ந்து கவனித்துவருவதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. சிறப்புக் கவன ஈர்ப்பு-அவசரத் தன்மை வாய்ந்த மிக முக்கியமானபொருட்கள் குறித்த சிறப்புக் கவன ஈர்ப்பு என்ற வகையில் அவையில் எடுத்துக்கொள்ளப்பெற்றவை – 3 உரையாற்றிய உறுப்பினர்கள் – 12(அனைவரும் எதிர்க்கட்சியினர் சிறப்புக் கவன ஈர்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு மொத்த நேரம் – 1 மணி 24 நிமிடங்கள்தகவல் கோரல்-தகவல் கோரல் என்ற முறையில் அவ்வப்போதுமுக்கியப் பிரச்சினைகள் அவையில் எழுப்பஅனுமதிக்கப்பட்ட நேர்வுகள் – உரையாற்றிய உறுப்பினர்கள் – 13(அனைவரும் எதிர்க்கட்சியினர்)எடுத்துக்கொள்ளப்பட்ட மொத்த நேரம் – 34 நிமிடங்கள்கவன ஈர்ப்புகள்- உறுப்பினர்களிடமிருந்து வரப்பெற்றவை – 940கவன ஈர்ப்பாக அனுமதிக்கப்பெற்றவை – 499அவையில் விளக்கம் அளிக்கப்பெற்றவை – 15சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்ளப்பெற்ற்வை – உரிமை மீறல் குறித்த பிரச்சினைகள்-அவையில் எழுப்பப்பெற்றவை – உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பெற்றவை – 2குழு அவைக்கு அளித்துள்ள அறிக்கை – 1
அரசினர் சட்டமுன்வடிவுகள்-வரப்பெற்றவை – 22 நிறைவேற்றப்பெற்றவை – 22அரசினர் தனித் தீர்மானம்-வரப்பெற்றவை – 3நிறைவேற்றப்பெற்றவை – கர்நாடக அரசு மேகதாதுவில் இரண்டு புதிய அணைகள் கட்ட முயற்சிப்பதுதொடர்பாக 5-12-2014 அன்று பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின்மீதுமத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததற்கும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு திட்டஅறிக்கை தயாரிக்க 25 கோடி ரூபாயை கர்நாடக அரசு ஒதுக்கியுள்ளதற்கும் பேரவைவருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்வதோடு, தமிழ்நாடுமுதலமைச்சர் ஜெயலலிதா பிரதமரை சந்தித்தும், கடிதம் அனுப்பியும்,உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தும் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல்காவேரியில் எந்தத் திட்டத்தையும் கர்நாடக அரசு செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக எடுத்து வரும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தும், மேகதாதுவில்அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதை தடுத்து நிறுத்தவும், அதனைசெயல்படுத்துவதற்கான திட்டங்களை கர்நாடக அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என்றுமத்திய அரசு அறிவிப்பை வழங்கவேண்டும் எனவும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும்காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்கவேண்டுமெனவும் மீண்டும் வலியுறுத்தும் தீர்மானம் 27-3-2015 அன்று பேரவையில்ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை நடத்தியவர்கள் அனைவர்மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலானவலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுமுன்பு அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டுவர வேண்டுமென்றும்,அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால் அதனை மாற்ற ராஜதந்திரரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்தியப் பேரரசை கேட்டுக்கொள்ளும்தீர்மானம் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் வழங்கி 16-9-2015 அன்று முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.சென்னையில் இம்மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் உலகமேவியக்கும்வண்ணம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்தி, சாதனை புரிந்து, ஒருஇலட்சம் கோடி ரூபாய் இலக்கையும் மிஞ்சி தமிழகத்திற்கு 2 இலட்சத்து 42 ஆயிரத்து 160கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்த்து, 4 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்து, தமிழகத்தில் தொழிற்புரட்சிமூலம்தமிழர்களின் வாழ்விலும், இந்தியப் பொருளாதாரத்திலும் மிகப் பெரிய மாற்றத்தை,மறுமலர்ச்சியை, ஏற்றத்தை ஏற்படுத்த வழிவகுத்த முதலமைச்சருக்கு பேரவை நன்றியையும்பாராட்டினையும் தெரிவித்து, இது போன்ற சாதனைகள் தொடர வேண்டும் என்று மனதாரவாழ்த்துகின்ற தனித் தீர்மானம் 23-9-2015 அன்று நிறைவேற்றப்பட்டது.
விதி 110-ன்கீழ் முதலமைச்சரின் அறிக்கைகள்-விதி 110-ன்கீழ் தமிழக மக்கள் அனைவரின் வாழ்க்கையைத் தொடும் அனைத்துஅம்சங்கள் குறித்தும் முதலமைச்சர் அம்மா கடந்த நான்குஆண்டுகளாக பேரவை நடக்கும்போதெல்லாம் தினந்தோறும் பல்வேறு வரலாற்றுச்சிறப்புமிக்க அறிவிப்புகளை செய்து வந்துள்ளதோடு அதற்கான நிதியையும் உடனுக்குடன்ஒதுக்கி திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்துள்ளார்கள். அவ்வகையில் கடந்த ஆண்டு வரை அனைத்து அரசுத் துறைகள் சம்பந்தமாககீர்த்திவாய்ந்த 150 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தஆண்டு மீண்டும் அந்த சரித்திரச் சாதனையை தொடரும் வண்ணம் இக்கூட்டத்தொடரில்மேலும் 31 அறிவிப்புகளை செய்துள்ளார்கள். ஆக, வரலாற்றிலேயே இல்லாதஅளவிற்கு இந்த பதினான்காவது பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா மாநில மக்களின் நலன் பேμம் திட்டங்கள் பற்றியும், அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு பற்றியுமபேரவை விதி 110-ன்கீழ் மொத்தம் 181 அறிக்கைகளை அளித்து கின்னஸ் சாதனைபடைத்துள்ளார்கள் என்பதை மெத்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.உறுப்பினர்கள் வருகை-
17-2-2015 முதல் 29-9-2015 வரை பேரவைக் கூட்டம்நடைபெற்ற அனைத்து நாட்களும் பேரவைக்கு வருகை புரிந்தஉறுப்பினர்கள் பட்டியல்-எம்.கே. அசோக்ஆ.க. அரங்கநாதன்க. அழகுவேலு. கே.பி. அன்பழகன். வி.சி. ஆறுக்குட்டி. கடம்பூர் ராஜு. வி.பி. கலைராஜன். என்.வி. காமராஜ் உள்ளிட்ட 87 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். பார்வையாளர்களாக16 ஆயிரத்து 526 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.