திங்கள் கிழமை சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற்ற பாஜக., பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மைக்ரோ இரிகேஷன் ப்ராஜக்ட் என்று சொன்னதை தமிழாக்கிய அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, சிறு நீர்ப்பாசனம் என்று விரைவாகச் சொன்னதை சிறுநீர்ப்பாசனம் என்று சொன்னதாக எடுத்துக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் போட்டு வருகிறார்கள். இந்நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்….
இன்று தினகரன் பத்திரிகையில் 14 ம் பக்கத்தில் ஒரு செய்தி வந்துள்ளது. அதை 200 ரூபாய்க்கு மீம்ஸ் போடும் கும்பல் சிறுநீர் மூழ்கியுடன் வந்தார் அமெரிக்க தொழிலதிபர் என்று கூச்சல் போடும் பாருங்கள்.