சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சிறையில் கொலைக் குற்றவாளிகளான முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவுபடி சலுகை கொடுக்கப்பட்டது என்கிறார். அப்படி என்றால், அமைச்சர் கருத்துக்கு நீதிமன்றம் விளக்கம் தர கடமைப்பட்டுள்ளது என்ற குரல்கள் இப்போது ஓங்கி ஒலிக்கின்றன.
சென்னை புழல் சிறையில், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சலுகைகள் அளித்து, சொகுசு வாழ்க்கை வாழ உதவியதாக சிறைத்துறையின் காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. மிகப் பெரும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தொடங்கி, நீதித்துறையின் அமைச்சர்கள் வரையிலான ஆசி இல்லாமல் இத்தகைய சொகுசு வாழ்க்கையை ஒரு கட்டுக்கோப்பான சிறையில் பயங்கரவாதிகள் அனுபவிக்க இயலாது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், நீதிமன்ற உத்தரவின்படியே உட்பட்டே சிறையில் கைதிகளுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
ராமசாமி படையாட்சியின் 101வது பிறந்த நாளில் சென்னை கிண்டியில் அவரது படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
புழல் சிறையில் சொகுசு வாழ்க்கை, நட்சத்திர விடுதி போன்ற வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அந்தப் புகைப் படத்தில் இருக்கும் சிறைக் கைதி, போதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர். அவர் 5 வருடங்களாக சிறையில் இருந்து வருகிறார். நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு முதல் வகுப்பு பிரிவு ஒதுக்கப் பட்டிருக்கிறது. சிறை விதிகளின்படி முதல் வகுப்பில் வழங்கப்பட வேண்டிய வசதிகள்தான் அவருக்கு அளிக்கப் பட்டுள்ளன. அவர் சிறை ஆடை அணியவில்லை என்றும் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.
காலை 7.30 மணி முதல் மாலை வரை சிறை வேலைகளைச் செய்யும்போது மட்டும்தான் சிறை ஆடை அணிய வேண்டும். மற்ற நேரங்களில் முதல் வகுப்பு கைதிகள் தாங்கள் வைத்திருக்கும் ஆடைகளை அணியலாம் என சிறை விதி 228ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் புதிய ஆடை வாங்கிக் கொள்ளலாம். உணவும் தயாரிக்கலாம் என்றும் விதிகளில் கூறப்பட்டுள்ளது. முதல் வகுப்பு கைதிகள், அவர்களே தொலைக்காட்சி வாங்கி வைத்துக் கொள்ளலாம். புழல் சிறையில் உள்ள 24 பிளாக்குகளில் 20 பிளாக்குகளில் முதல் வகுப்பு கைதிகள் உள்ளனர்.
கைதிகள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேசுவதற்கு சிறை நிர்வாகமே தொலைபேசி வசதி செய்து கொடுத்திருக்கிறது. சிறை நிர்வாகத்தில் உள்ள சிலரின் தவறான நடவடிக்கை காரணமாக சிறைக்குள் செல்போன்கள் வந்துவிடுகின்றன. அதைத் தடுக்க சிறை நிர்வாகம் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
செல்போன்கள் அதிக எண்ணிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறை அறைக்குள் தொலைக்காட்சி இருப்பதால் தான் செல்போனில் சார்ஜ் போடுகின்றனர். அதனால் தொலைக்காட்சிப் பெட்டிகளை சிறை அறைகளுக்கு வெளியே வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ஒரு செல்போன்கூட சிறைக்குள் போகாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கைதிகள் அனைவரும் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று கூறினார் அமைச்சர் சண்முகம்.
வெளியில் வந்த புகைப்படங்களும், அமைச்சர் கூறிய விளக்கங்களும் இப்போது நீதிமன்றத்தின் உத்தரவுப் படியே சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப் பட்டதாக நீதிமன்றத்தைக் கையைக் காட்டியதில் இருந்து, பலரும் தங்கள் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
கொலைக் கைதிகளும் சொகுசுவாழ்க்கை வாழும் அளவுக்கு சிறை விதிகள் இருப்பதானால், கொலைகளும் குற்றங்களும் ஏன் அதிகரிக்காது என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். இந்நிலையில், இது குறித்து நீதிமன்றம்தான் தங்கள் நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
Ignorant law minister , what else to say