மீடூ.,வில் இப்போது அடுத்த டார்கெட் நடிகர் தியாகராஜன்தான்.. நடுராத்திரி என் ரூம் கதவை தட்டினார் என்ரு இளம்பெண் பகீர் புகார் சொல்லியிருக்கிறார்.
மீ டூ வில் இப்போது அடுத்த டார்கெட் நடிகரும், இயக்குநருமான தியாகராஜன்! வைரமுத்து தொடங்கி ஏராளமானோர் மீடூ என்ற ஹேஷ்டாக்கில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் பெயர் அடிபட்டு, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி துறை சார்ந்த பிரபலங்களின் பெயர்கள் தினமும் அடிபட்டுக் கொண்டிருப்பதால் தமிழ்த் திரையுலகே பரபரப்பாகி உள்ளது.
நடிகர் அர்ஜூன் மீது இதே போன்ற பாலியல் குற்றச்சாட்டை ஒரு பெண் சுமத்தினார். அந்த வரிசையில் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் மீது புகார் எழுந்துள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான பொன்னர் – சங்கர் படத்துக்கு தியாகராஜன்தான் இயக்குனர்.
அந்தப் படப்பிடிப்பின்போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அந்தப் படத்துக்கு போட்டோ கிராபராக பணியாற்றிய இளம் பெண் ஒரு குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.