― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்சென்னைசாணி தட்டவா தூண்களை வைத்து மண்டபம் கட்டினார்கள்? என்ன கொடுமை இது!

சாணி தட்டவா தூண்களை வைத்து மண்டபம் கட்டினார்கள்? என்ன கொடுமை இது!

- Advertisement -

ஆலயங்களுக்கு வருபவர்கள், வழிப்போக்கர்கள், வியாபாரம் செய்வதற்காக சாலையில் செல்பவர்கள் இளைப்பாற ஓய்வு எடுக்க, அழகிய மண்டபங்களைக் கட்டி வைத்தார்கள் முன்னோர்கள்! அவை சற்று நேரம் தங்குமிடங்களாக, தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டன.

ஆனால், காலம் மாற மாற அந்த எண்ணமே நம் சமுதாயத்தில் இருந்து துடைத்தெறியப் பட்டுவிட்டது. ஆலயங்களுக்கு வருபவர்கள் தங்கிச் செல்ல மண்டபங்களோ, ஓய்விடங்களோ அரசால் கட்டி வைக்கப் படவில்லை! இருக்கும் பழைமையான மண்டபங்களையும் அரசு பராமரிக்காமல், அவை தனி நபர்களால் ஆக்கிரமிக்கப் பட்டு, வைக்கோர் போர்களாகவும், சாணி தட்டும் இடங்களாகவும், குப்பை கூளங்களை கொட்டும் இடங்களாகவும் மாறி, இடிந்து பாழ்படுத்தப் படுகிறது.

கொள்ளை அடிப்பதே கொள்கை என்று செயல்படும் அரசு அதிகாரிகள், இவற்றின் இழி நிலையைக் கண்டும் காணாமல் செயல்படுவது பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தங்களது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலர் ராம.ரவிக்குமார்.

காஞ்சி அருகே ஓர் இடத்தில் பெருமாளுக்கான மண்டபம் இருக்கும் இழி நிலையை சோலை வீரமணி, ராஜேந்திரன், ராஜேஷ், கிருஷ்ணா, ரமேஷ் கிரிஷ்ணா என தனது குழுவினருடன் சென்ற போது கண்டதை விவரிக்கிறார் ராம.ரவிக்குமார்….

காஞ்சி மாவட்டம் வாலாஜாபாத் அருகில் உள்ளது திம்மராஜபேட்டை. இந்த ஊரில் பிரதான சாலையில் வலது புறம் அருள்மிகு கங்கைஅம்மன் திருக்கோவில் உள்ளது.

இந்தத் திருக்கோவிலை ஒட்டி பழமையான கல்மண்டபம் ஒன்று கண்டோம். அந்தக் கல்மண்டபத் தூண்களில் ஆஞ்சநேயர் , நரசிம்மர், மீன் சின்னம் , பாம்பு சின்னம் , சந்திரன் , …… இதற்கு அடுத்து மனதை கலங்க செய்த சமத்துவபுரட்சியாளர் ஸ்ரீராமானுஜர் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருந்தது .

விசாரித்த வரையில் காஞ்சி வரதர் உத்ஸவ கால மண்டகபடி என்று சொல்கிறார்கள். ஆனால் இன்றைய நிலை இடிந்து விழும் சூழல்.

அதோடு மாட்டு சாண விரட்டி மண்டபம் முழுவதும் சுவர்களை அலங்கரித்து, அருள் பாலித்தது. தரையின் கீழே பெரிய பெரிய சாணக்குவியல்கள் கொசு உற்பத்தி கூடமாய் மாறி உள்ளது.

இந்த மண்டபத்தை ஒட்டி ஒரு வீடு சிலுவை சின்னம் வெளி சுவரில் போட்டு உள்ளது .
இது சொந்த இடமா ? இல்லை ஆக்கிரமிப்பு இடமா ? எமக்கு தெரியாது. ஆனால் இந்த சிலுவைவீடு உதவியுடன் நாளை கோவில் மண்டகபடி கல்மண்டபத்தை சிலுவை கோவிலாக, கிறிஸ்தவ சபையாக கூட மாற்றபடலாம் எனவும் , அதற்கு ஏசு பிரான் இந்த இடத்தில் அருள் பாலித்தார் , அதனால் தான் சாணம் தட்டுகிறோம் என்று புனைவு கதைகள் பல உருவாகலாம் .

காரணம் மண்டபம் நேர் எதில் பள்ளி கட்ட இடம் கேட்டு சபை கட்டிய மதமாற்ற கிறிஸ்து சபை ஒன்று உள்ளது. நமது அடையாள அழிப்பு மெல்ல அல்ல, அதிவேகமாக தொடங்கி விட்டது,

ராமானுஜரை ஏசுவின் சீடர் என அரிச்சந்திரனை போல் ஆதாரங்களோடு பேச துவங்குவார்கள் ஏசுவின் ஏஜன்டடுகள்! அதையும் கேட்டு ஆமாம் சாமி போடுவார்கள் எலும்புக்கு வாலாட்டும் ஜீவன் போல நம்மவர்கள். தமிழக அரசு , அறநிலைய துறை மன்னிக்கவும் அடையாள அழிப்பு செய்யும் இந்த அயோக்கியத்திற்கு துணை போகும் அதிகாரிகள், அமைதியாக இதை கண்டும் நமக்கேன் வம்பு என அமைதியாக வாழ்க்கை நடத்தும் இந்துக்கள் இவர்களை கண்டால் , மனதில் நினைத்தால் கோபம் கோபமாக வருகிறது.

இதை தடுத்து நிறுத்தி , ஆலய சொத்தை காப்பது நமது கடமை, ஆலய அடையாள அழிப்பு பயங்கரவாதிகளிடமிருந்து நமது ஆலயத்தை , அடையாளத்தை பாதுகாப்போம்.
மீட்டெடுப்போம்.

1 COMMENT

  1. dear sriram,
    For destroying temples & mandapams , the persons have not come from America or Russia..It is the antibrahmin tamilians who encouraged beating of ganesh statue , cutting the boonels etc are responsible .What we call “veliye bayir meydal”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,162FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,902FollowersFollow
17,200SubscribersSubscribe
Exit mobile version