ஜெ., மரணத்தில் மர்மம் என டிவி., நிகழ்ச்சி: கலாநிதி மாறனுக்கு சம்மன்!

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என நிகழ்ச்சிநடத்தப் பட்ட விவகாரத்தில், சன் குழும தலைவர் கலா நிதிமாறனுக்கு சம்மன் அனுப்பப் படும் என்று ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இது குறித்துக் கூறிய போது, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒளிபரப்பியது தொடர்பாக சன் குழும தலைவர் கலாநிதிமாறனை விசாரிக்க சம்மன் அனுப்பப்படும்!

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என்று கூறியதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்ட போது, எந்த ஆதாரமும் இல்லை என்று அவர்களது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். என்று கூறினார்.