ஜெயலலிதாவின் 2வது நினைவு தினம்: முதல்வர் அஞ்சலி; அமைதிப் பேரணி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, சென்னை அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு முன்னால் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் ஓவியங்களில் வரையப்பட்டுள்ளன.

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி கருப்புச் சட்டை அணிந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, சென்னையில் அவரது நினைவிடம் நோக்கி அதிமுகவினர் அமைதிப் பேரணி நடத்தினர். இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் கருப்புச் சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

அண்ணா சிலை அருகே தொடங்கி வாலாஜா சாலை வழியாக ஜெயலலிதா நினைவிடம் வரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாகச் சென்றனர். பின்னர், ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி, ஓ.பி.எஸ் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, அரசியல் காரணங்களுக்காகவே அதிமுகவினர் அமைதி பேரணி செல்வதாக, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ஜெ.தீபா பேட்டி அளித்துள்ளார்.

அரசியலில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா
என்று திமுக எம்.பி.கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.