தொடரும் மழை! நாளை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல எச்சரிக்கை!

கோப்புப் படம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும், மீனவர்கள் இரு நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

சென்னை வானிலை மைய துணை பொது இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, கன்னியாகுமரி முதல் தெற்கு ஆந்திரா வரை நிலவிய காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேற்கில் நகர்ந்து கன்னியாகுமரிக்கும் வடக்கு கேரளாவுக்கும் இடையே நிலை கொண்டுள்ளது.

இதன் காரணத்தால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில், இன்று பரவலாக மழை பெய்யும்.

இந்தியப் பெருங்கடலின் நிலநடுக்கோட்டை ஒட்டிய பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. எனவே மன்னார் வளைகுடாவுக்கு இடைப்பட்ட தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்குள் நாளை வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறினார்.