மகளிர் விடுதியில் ரகசிய கேமரா வைத்து ரசித்துப் பார்த்த சஞ்சீவி! போலீஸில் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்!

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள் வைத்து, பெண்களை நோட்டமிட்ட விவகாரம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த விடுதியை நடத்தி வந்த சஞ்சீவ் என்பவர் போலீஸாரால் கைது செய்யப் பட்டார். சஞ்சீவி அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் தெரிவித்துள்ளதால், அவரை காவலில் எடுத்த விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சஞ்சீவ் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்த தகவல்களை போலீஸார் கூறியுள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கத்தில் ரகசிய கேமரா விவகாரத்தில் கைதான சஞ்சீவி, சிவில் என்ஜினீயரிங் படித்தவர்; கடந்த 10 ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலில் உள்ளவர்! ஒரு மோசடிப் புகாரில் கடந்த 2012ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டவர்!

அந்த வழக்கின் பின்னர் ஆதம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பை 24 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு தனது குழந்தைகளுக்கு அங்குள்ள பிரபல பள்ளியில் இடம் கிடைக்க வில்லை என்பதால், ஆதம்பாக்கத்தில் இருந்து அஸ்தினாபுரத்துக்கு அவர் மாறிச் சென்றுள்ளார்.

அதன்பிறகு, ஆதம்பாக்கம் வீட்டை பெண்கள் தங்கும் விடுதியாக மாற்றிய சஞ்சீவ், ஆன்லைன் விளம்பரம் செய்தார். அதைப் பார்த்து ரூ.7 ஆயிரம் வாடகைக்கு 6 பெண்கள் வந்ததுள்ளனர். அந்தப் பெண்கள் அனைவரும் பகலில் வேலைக்குச் சென்று விடுவதால், அந்த நேரத்தில், தனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாக விடுதியை பயன்படுத்திக் கொண்டுள்ளார் சஞ்சீவ்!

அதற்கு முன் தான் கட்டுமான நிறுவனம் நடத்தியபோது தன்னிடம் வேலை பார்த்த 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதை வீடியோவில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறி போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

அதுபோல் விடுதியில் தங்கி உள்ள பெண்களையும் தனது பாலியல் ஆசைக்கு இணங்கச் செய்வதற்காக, ரகசிய கேமராக்களை பொருத்தி வைத்துள்ளார். வழக்கமான சினிமாத்தனமான ஸ்டைலில், அரைகுறை ஆடைகளில் இருக்கும் போது பெண்களைப் படம் பிடித்து, அதை வைத்தே மிரட்டி, தன் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணியுள்ளார். இதற்காக, ‘வைஃபை’ மூலம் இயங்கும் 9 நவீன ரக சிறிய கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். அந்தக் கேமராக்களின் விலை ஒவ்வொன்றும் ரூ.2,500 தானாம்!

அந்தக் கேமராக்களை தகுந்த இடங்களில் பொருத்தி வைத்த சஞ்சீவ், அவற்றை ‘வை-பை’ மூலமாக இயக்கிப் பார்த்துள்ளார். தொடர்ந்து, அந்தப் பெண்கள் அனைவரும் வேலைக்குச் சென்ற பின்னர், குளியல் அறைகள், படுக்கை அறைகளில் தானே சென்று ரகசியமாக அந்தக் கேமராக்களைப் பொருத்தியுள்ளார். இந்த கேமராக்கள் ஆள் நடமாட்டம் இருந்தால் மட்டுமே பதிவு செய்யும் தொழில் நுட்பம் கொண்டவையாம்!

“விடுதியில் தங்கியிருந்த பெண்களின் மீது ஏற்பட்ட ஆசையால், திட்டமிட்டு ரகசிய கேமராக்களை பொருத்தினேன். அதைக் காட்டி மிரட்டியே அவர்களைப் படிய வைக்கலாம் என்று திட்டம் போட்டிருந்தேன். ஆனால், அதற்குள் மாட்டிக்கொண்டேன்” என போலீசாரிடம் சஞ்சீவி கூறியுள்ளார்.

சஞ்சீவி அளித்த வாக்குமூலம் போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்தது. தொடர்ந்து, இது போன்று இயங்கும் மகளிர் விடுதிகள் குறித்து ஒரு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.

தற்போது சஞ்சீவியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ள போலீசார், மேலும் அவரிடம் விசாரணைகளை தீவிரப் படுத்த முடிவு செய்துள்ளனர்.

அதன்பின், விடுதியில் தங்கியிருந்த பெண்களின் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. எனவே, திட்டமிட்டு ரகசிய கேமாராக்களை பொருத்தினேன். அதைக் காட்டி மிரட்டி பெண்களிடம் உல்லாசம் அனுபவிக்கலாம் என திட்டம் போட்டிருந்தேன். ஆனால், அதற்குள் போலீசாரிடம் மாட்டிக்கொண்டேன்” என கூறியுள்ளார்.
சென்னையில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.