நாளை முதல் பாரதி திருவிழா! கலைக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் ஆளுநர்!

வானவில் பண்பாட்டு மையம் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டில், பாரதி திருவிழாவை தேசபக்திப் பெருவிழாவாக கொண்டாடுகிறது.  இநத ஆண்டில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, வானவில் பண்பாட்டு மையத்துடன் இணைந்திருக்கிறது.

நாளை (டிச.8) சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  வீர சுதந்திரம் கலைக் காட்சியைத் தொடக்கி வைத்து பாரதி விருது வழங்கவுள்ளார்.

பாரதி பிறந்த நாளான டிச.11 அன்று காலை 9 மணிக்கு தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஜதி பல்லக்கு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.

பாரதி திருவிழா முதல் இரண்டு நாட்கள் (டிச.8, 9) கலைவாணர் அரங்கத்திலும், அடுத்த இரண்டு நாட்கள் திருவல்லிக்கேணி பாரதி இல்லத்திலும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் இங்கே…