சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் வெகுவாகக் குறைக்கப் பட்டு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப் பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய் அளவுக்கு குறைத்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் முதலில் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ரயில்கள் தற்போது 35 கி.மீ தொலைவு வரை இயக்கப்படுகின்றன. இதில் விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை உள்ள 23 கி.மீ.,ம், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை உள்ள 22 கி.மீ., பயணத் தொலைவும் இதில் அடங்கும்.

இருப்பினும், மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், கட்டணத்தை தற்போது குறைத்து, மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன் விவரங்கள் பின் வருமாறு :

விமான நிலையத்திலிருந்து..

மீனம்பாக்கம் – ரூ.10
நங்கநல்லூர் – ரூ.20
ஆலந்தூர், கிண்டி, சின்னமலை,சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம் பேட்டை – ரூ. 40
டிஎம்எஸ், ஆயிரம்விளக்கு, எல்ஐசி, அரசினர்தோட்டம், சென்டரல் -ரூ.50
உயர் நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை – ரூ. 60 ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம்- ரூ.40
ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேருபூங்கா, எழும்பூர்-ரூ.60

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து…

விமானநிலையம் – ரூ. 50
மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை – ரூ. 40
நந்தனம், தேனாம்பேட்டை, டிஎம்எஸ், ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி, அரசினர் தோட்டம், செண்டரல் – ரூ. 40
உயர் நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை – ரூ. 50
ஈக்காட்டுத்தாங்கல் – ரூ. 40
அசோக்நகர் – ரூ.30
அரும்பாக்கம், கோயம்பேடு – ரூ. 10
வட பழனி, திருமங்கலம், அண்ணா நகர் டவர் – ரூ. 20
அண்ணாநகர் கிழக்கு – ரூ.30
ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர், பரங்கி மலை – ரூ. 40

எழும்பூரில் இருந்து…

விமான நிலையம் – ரூ. 50
மீனம்பாக்கம் – ரூ. 60
நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி – ரூ.50
சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் – ரூ. 40
ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி – ரூ.30
அரசினர் தோட்டம் – ரூ. 20
செண்ட்ரல் – ரூ. 10
உயர் நீதிமன்றம், மண்ணடி – ரூ.30
ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர் – ரூ. 50
வட பழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம் -ரூ. 40
அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு – ரூ. 30
ஷெனாய் நகர் – ரூ.20 பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் – ரூ.10
பரங்கி மலை – ரூ.50

சென்ட்ரலில் இருந்து…

விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர் – ரூ. 50
கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை – ரூ.40
டி.எம்.எஸ் – ரூ.30 ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி – ரூ.20
அரசினர் தோட்டம், உயர்நீதிமன்றம்,எழும்பூர் – ரூ. 10
மண்ணடி, வண்ணாரப்பேட்டை – ரூ.20
ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் – ரூ. 50
கோயம்பேடு பேருந்து நிலையம், திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, பரங்கிமலை – ரூ.40
ஷெனாய் நகர் , நேரு பூங்கா – ரூ.20

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...