சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில், மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டைகளை இழந்தவர்கள், வரும் 29ம் தேதி வரை புதிய வாக்காளர் அடையாள அட்டை கோரி விண்ணபிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:.
சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளுக்கு விண்ணபிக்க வரும் 29ம் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஒன்று,ஒன்பது, ஐந்து, பூஜ்யம் 1950 என்ற எண்ணில் புகாரை பதிவு செய்தால், மாற்று வாக்காளர்அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.