திர்நாறு பூசுறது தப்புன்னா… எதுக்கு அத பூசுனவங்ககிட்டே வோட்டு கேட்டு வர்றீங்க கனிமொழி!?

திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் குன்றி, உடல் இயக்கம் சரியில்லாமல், தன்னுணர்வும் இல்லாமல் சக்கர நாற்காலியில் சுற்றி வந்தபோது, அவரது உதவியாளர் நித்யானந்தம் கருணாநிதிக்கு மந்திரித்த திருநீறு பூசி விட்டதாகவும், அதை உடனே கருணாநிதி அழித்ததாகவும் கனிமொழி கூறிய வீடியோ பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை வைத்து அவருக்கு பல கேள்விகளை முன்வைக்கின்றனர் சமூகத் தளங்களில்! திருச்செந்தூர் முருகன் கோவில் செல்லும் பக்தர்கள், திருச்செந்தூர் இலை விபூதியை வாங்காமல் வருவதில்லை. திருநீறாகிய விபூதிக்கு தூத்துக்குடி தொகுதி மக்கள் பெரும் மதிப்பையும் மரியாதையையும் அளிப்பர். இத்தகைய தொகுதியில் போட்டியிடும் கனிமொழி, திருநீறு பூசுவதை விமர்சித்தும் கேவலப் படுத்தியும் பேசுவதை விமர்சித்து, இத்தகையவருக்கா ஆன்மிக இந்துக்களின் ஓட்டு என்று கேள்வி எழுப்புகின்றனர்.

தலிவரு உடல் நல்மில்லாம இருந்தபோது… சிலநேரம் தலைவருக்கு நல்லா ஆகணும்னு, உதவியாளர் நித்யா (னந்தன்)…  தலைவர் நெற்றியில் திருநீரு வைத்துவிடுவார். உடனே தலைவரின் கை  மட்டும் மேலெழுந்து திருநீரை அழித்துவிடும். உடனே நித்யா… “எது தெரியுதோ இல்லையோ… இதை மட்டும் கரக்ட்டா செஞ்சுடுவார்” ன்னுவார். நான்… “நல்லா இருந்திருந்தா, உங்கள அடிச்சிருப்பார்…” ன்னு சொல்லுவேன் : கனிமொழி, திமுக

இந்த டுபாக்கூர் நாத்திகமெல்லாம் இருக்கட்டும், உங்க அப்பாவோட மஞ்ச சால்வைக்கு மேட்ச்சாகுறமேரி… பொருத்தமா ஒருகதைய சொல்லும்மா. நீங்க வாசிங்கண்ணே… நா தூங்கணும் !!! – என்று  சக்தி வெங்கடேசன் என்பவர் கருத்திட்டிருக்கிறார்.

கட்டுமரத்துக்கு குணமாக விபூதி வைத்ததே தவறு, அதை சுய நினைவு இல்லா நிலையிலும் அழித்ததாக கூறி பெருமை அடையும் கனிமொழிக்கு உங்க ஓட்டா? தூத்துக்குடி மக்களே மற்ற இடங்களில் வாழும் எங்களுக்கு இவளை தோற்கடிக்க வாய்ப்பில்லை! நீங்க பயன் படுத்திக்கொள்ளவும்

  • என்று தனது டிவிட்டர் பதிவில் எஸ்.பரந்தாமன் என்பவர் கருத்துப் பதிவிட்டுள்ளார். இன்னும் பலர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, கனிமொழிக்கு எதிராகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...