Homeசினிமாசினி நியூஸ்வால்டர்' கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை: எச்சரிக்கும் சிங்காரவேலன்!

வால்டர்’ கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை: எச்சரிக்கும் சிங்காரவேலன்!

waltor1 - Dhinasari Tamilதமிழ் திரையுலகில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் உள்ள சிங்காரவேலன் தற்போது மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர்’ என்கிற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். விக்ரம் பிரபு, அர்ஜுன் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் அன்பரசன் இயக்க உள்ளார்..

இந்த நிலையில் தயாரிப்பாளர் பிரபு திலக், இதே இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில், சிபிராஜ், கௌதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் இதே கதையை வால்டர் என்கிற தலைப்பிலேயே படமாக தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின..

இதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கான பூஜையும் இன்று போடப்பட்டு அந்த புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன!

இதனைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் சிங்காரவேலன், ‘வால்டர்’ படத்தின் கதையும் படத்தின் தலைப்பும் தன் வசமே இருக்கிறது என்றும், இதே கதையை வேறு நடிகர்களை வைத்து தனது அனுமதி இல்லாமல் தயாரிக்க முற்பட்டால் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் மூலமாக கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,818FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...

Exit mobile version