சென்னை புறநகர் மின்சார ரயில் பயணிகள் கவனத்துக்கு! இன்று ரத்தாகும் ரயில் சேவைகள்!

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள், சுரங்கப்பாதை பணிகள் காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில்வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 7 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பகுதி நேரமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள், சுரங்கப்பாதை பணிகள் காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு தினசரி மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தாம்பரத்தை அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி – வண்டலூர் இடையே உள்ள பகுதியில் பாலம் கட்டும் வேலைகள் நடப்பதால் செங்கல்பட்டு செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று காலை 10 மணி முதல் நாளை அதிகாலை 3.55 மணி வரை மின்சார ரயில்கள் இயங்காது. எனினும், பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து திருமால்பூருக்கு பகல் 2.50, மாலை 4.50, இரவு 8.45 ஆகிய நேரங்களில் ரயில்கள் இயங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில்வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 7 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பகுதி நேரமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் மேற்கண்ட நேரங்களில் ரயில் பயணங்களை திட்டமிட வேண்டாம்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...