கோவில் கல்வெட்டு தகவல்களை தமிழ் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை பரிசீலித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை நேற்று உத்தரவு பிறப்பித்தது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவிலைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன! அவற்றில் கோயில்களில் சிறப்பு வரலாறு, அப்போதைய சூழ்நிலைகளில் நடைபெற்ற போர்கள், சமாதான உடன்படிக்கைகள் இவை குறித்த தகவல்கள் ஏராளமாக உள்ளன.

இவற்றை மக்கள் அறியும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கல்வெட்டு தகவல்களை தொகுத்து அந்தந்த தலங்களில் வெளியிட்டால் தமிழர்களின் வரலாறு குறித்து அறிய பேருதவியாக அமையும்.

மேலும் கல்வெட்டுகளில் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் அவற்றை அறிந்து கொள்வதன் மூலம் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்கவும் வாய்ப்பாக அமையும்!

வேதபுரி மன்னார்கோவில் ஸ்ரீ பெரியநம்பி பராங்குச தாசர் திருமாளிகை – பெரியநம்பி நரசிம்ம கோபாலன்.

தமிழர்களின் வரலாறு பழமையானது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ள நிலையில் கோயில் கல்வெட்டு தகவல்களை தமிழ் ஆங்கில மொழிகளில் வெளியிட்டால் அதற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் அமையும் என்பதுடன் தமிழர்களின் பாரம்பரிய சிறப்புகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பாகவும் அமையும்

இதுகுறித்து தொல்லியல் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை! எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடவும் அவற்றை கோயில் வளாகங்களில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணா, புகழேந்தி அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது! அப்போது நீதிபதிகள் மனுதாரரின் மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் அரசு உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...