பிகிலு பட போஸ்டர்… இறைச்சி வியாபாரிகள் டர்ர்ர்ர்…! காரணம் என்ன தெரியுமா?!

இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்து நடிகர் விஜய் தங்கள் தொழிலை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி பிகில் பட சுவரொட்டியைக் கிழித்து, கோவை ஆட்சியர் அலுவலகம் முன் இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

coimbatore protest
பிகில் படத்திற்கு எதிராக போராட்டம்

பிகில் திரைப்படத்தில் இறைச்சி வெட்டும் கட்டை மீது கால் வைத்து நடிகர் விஜய் இறைச்சி வியாபாரிகளை இழிவு படுத்தியதாக கூறப்படும் புகைப்படங்களை கிழித்து கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

பிகிலு திரைப்படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிறது. இதில், கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு கதைக்களன் அமைக்கப் பட்டிருக்கிறது.

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் போஸ்டர்களில், இளமையான தோற்றத்தில் இருக்கும் விஜய், கால்பந்தை தூக்கிப் போட்டபடி போஸ் கொடுக்கிறார். இன்னொரு விஜய், ஆத்திரத்துடன் கத்தி செருகப்பட்ட இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்தபடி ஒரு சேரில் அமர்ந்திருப்பார். அந்தப் படம் தற்போது இறைச்சி வியாபாரிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்து நடிகர் விஜய் தங்கள் தொழிலை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி பிகில் பட சுவரொட்டியைக் கிழித்து, கோவை ஆட்சியர் அலுவலகம் முன் இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

coimbatore bigil

தாங்கள் தெய்வமாக மதிக்கும் இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது காலணி அணிந்து மிதித்தபடி, கால் வைத்து போஸ் கொடுப்பதா என்று அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கோவை ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட அவர்கள், பிகில் போஸ்டர்களைக் கிழித்தனர்.

சர்ச்சைக்குரிய இந்த போஸ்டர் தொடர்பாக ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் அந்த போஸ்டரில் உள்ள கேரக்டரின் செயலை நியாயப்படுத்துவது போல் தங்களுக்கு பதில் கிடைத்ததாகவும் கூறுகின்றனர். அது தங்களது ஆத்திரத்தை அதிகப்படுத்தி உள்ளதாகக் கூறிய இறைச்சி வியாபாரிகள், இந்தக் காட்சியை படத்தில் இருந்து நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறினர்.

இறைச்சி வெட்டும் மரக்கட்டை இறைச்சி வியாபாரிகளுக்கு தெய்வம் என்றால், எந்த இறைச்சிக்காக ஆடும் மாடும் வெட்டப் படுகிறதோ அந்த ஆடும் மாடும் எங்களுக்கு தெய்வம்தானே என்று சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisements