
கோவை அருகே வீட்டின் கதவை உடைத்து 135 சவரன் நகை 15 லட்சம் ரூபாய் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டன
கோவை தடாகம் சாலை டிவிஎஸ் நகர் அப்பாஸ் கார்டனில் வசிப்பவர் கனகராஜ். 50 வயதான இவர் கட்டுமான ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் கனகராஜ் குடும்பத்தினர் வெளியூர் புறப்பட்டுச் சென்றனர். நேற்று மாலை 5 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் காவலுக்கு இருந்த நாய் மயங்கிக் கிடந்து உள்ளது.
வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. வீட்டுக்குள் பீரோவில் இருந்த 135 சவரன் நகை 2 கிலோ வெள்ளி 15 லட்சம் ரூபாய் ஆகியவை திருடு போயிருந்தது.
கொள்ளையர்கள் நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்