மேலதிகாரியின் டார்ச்சர்: செவிலியர் தற்கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டம்

வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் தற்கொலை செய்து கொண்டதற்கு நியாயம் கேட்டு செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.

வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் தற்கொலை செய்து கொண்டதற்கு நியாயம் கேட்டு செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலதிகாரிகளின் டார்ச்சரால் வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் மணிமாலா(26) தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு சக செவிலியர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன், அவரது தற்கொலைக்குக் காரணமான மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனை ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கே பணிகள் பாதிக்கப் பட்டதுடன், பரபரப்பும் ஏற்பட்டது.