காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு மளமளவென குறைய தொடங்கியது.
கடந்த ஒரு வார காலமாக காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. கனமாழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,95,000 கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது.
தற்பொழுது நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை தனிந்து வருகிறது. மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 1.60 லட்சம் கன அடியாகவும் மாலையில் 75,000 கன அடியாகவும் குறைந்தது. நீர் வரத்து குறைந்ததால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 75,000 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்டது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 53,500கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மலமளவென குறைந்து வருவதால் காவிரி கரையோரங்களில் வெள்ள அபாயம் சற்று தனித்து வருகிறது.
