ஆத்தூர் அருகே தெற்கு காடு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராரில் மனைவி கிணற்றில் குதித்தார்.இவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவரும் நீச்சல் தெரியாமல் மூச்சு திணறி பலியாயினர்.இருவரும் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தீயணைப்புதுறையினர் உடலை மீட்டனர்.போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள 33வது வார்டு தெற்கு காடு சேரன் சாலையில் விவசாயி முனியன் மகன் விஜயகுமார் (30)இவருக்கும் கீரிப்பட்டியைச் சேர்ந்த செல்வி திருப்பதி தம்பதிகளின் மகள் கௌசல்யாவுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது,
இதில் 4 வயதில் ஹரிஹரசுதன் என்ற மகனும் கீர்த்தி என்கிற 7 மாத பெண் குழந்தையும் உள்ள நிலையில்,
இவர்கள் அதே பகுதியில் உள்ள ரவி என்பவரின் விவசாயத் தோட்டத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனர்,
இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது அதே போல் இன்றும் கணவன் மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த கௌசல்யா வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்ட கிணற்றில் குதித்துள்ளார் அதை பார்த்த கணவன் விஜயகுமாரும் அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த போது இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்,
அப்போது விஜயகுமாரி தந்தை முனியன் கூச்சலிடவே அக்கம் பக்கதினர் வந்து ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு படை குழுவினர் நீண்ட நேரம் போராட்டத்துக்கு பின்னர் இருவரின் உடலையும் மீட்டனர் .
இதை அறிந்த ஆத்தூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்பத் தகராறில் கணவன் மனைவி ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் குறித்து ஆத்தூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.