
ஈரோடு இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வருகிற 12-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்குகிறார் என்று அக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. அதிமுக கூட்டணி சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார்.தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரசாரம் தொகுதிமுழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 12-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்குகிறார் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. 12-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 5 நாட்கள் தீவிர பிரசாரம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பின்னர் தேர்தலுக்கு முந்தைய 2 நாட்களிலும் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வரும் பிப்19ல் உதயநிதி ஸ்டாலின் பிப்24ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.மநீமை சார்பில் கமல்ஹாசன் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.