ஈரோடு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என மொத்தம் 78 பெயர்கள் உள்ளதால் அனைத்து வேட்பாளர் பெயரும்ஷவாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியது உள்ளதால், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின்படி, 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என மொத்தம் 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியது உள்ளதால், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின்படி, 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரெயில் மூலம் இன்று காலை துணை ராணுவத்தினர் 184 பேர் வருகை தந்தனர். சென்னை ஆவடி, வேலூரில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 160 பேர் கடந்த 8-ந் தேதி ஈரோடு வந்தனர். வாக்கு எண்ணிக்கையின் மறுநாளான வரும் மார்ச் மாதம் 3-ந் தேதி வரை ஈரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கூடுதல் பாதுகாப்பு பணிகளில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், துணை ராணுவத்தினர், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை ஆவடி, வேலூரில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 160 பேர் கடந்த 8-ந் தேதி ஈரோடு வந்தனர். இந்த நிலையில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டதையடுத்து, கூடுதலாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதற்காக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2 கம்பெனி துணை ராணுவத்தினர் 184 பேர் ரெயில் மூலமாக நேற்று இரவும், இன்று காலையும் ஈரோடு வந்தடைந்தனர்.
இது தவிர இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் வருகை தந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நாளைக்குள் மேலும் 2 கம்பெனி துணை ராணுவ படைவீரர்கள் ஈரோடுக்கு வருகை தர உள்ளனர். இவர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பெட்டிகள் மீண்டும் தேர்தல் பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு செல்லும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதற்காக அவர்கள் வாக்கு எண்ணிக்கையின் மறுநாளான வரும் மார்ச் மாதம் 3-ந் தேதி வரை ஈரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். குறிப்பாக துணை ராணுவத்தினர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் முழுநேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். என்று தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.