
நான் கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு இன்னொரு பெருமை என்று ஜார்க்கண்ட் மாநில கவர்னராக விரைவில் பதவியேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் கூறினார்.
ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மீண்டும் ஒரு கவர்னர் பதவியை ஜனாதிபதி , பாரத பிரதமர் மோடி அளித்திருப்பது, அவர்கள் தமிழ் இனத்தின் மீது, தமிழ் கலாச்சாரத்தின் மீது, தமிழ் பண்பாட்டின் மீது, தமிழ் மொழியின் மீது மற்றும் தமிழர்களின் மீது மகத்தான அன்பு, பாசம், மரியாதை இருப்பதை காட்டுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கவர்னர் பதவியில் இருப்பது புதிய வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. எனக்கு அளிக்கப்பட்டிருக்க இந்த பதவியின் மூலமாக அதிலும் குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தரப்பட்டிருப்பது அங்கு வாழும் பழங்குடியின மக்க